தேர்தல் நேரத்தில் பிரபல நடிகரை பாராட்டிய அதிமுக.! இதுதான் காரணம்.!! - Seithipunal
Seithipunal


நேற்று முன் தினம் ரஜினிகாந்த் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அரசியலில் எனது நிலைப்பாடு குறித்த தகவலை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் மாறப்போவதும் இல்லை, அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை, எனக்கும் எனது தோழரான கமலுக்கும் இடையான நட்பை நீங்களே கெடுத்து விடாதீர்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியான நதிகளை இணைப்போம் வாக்குறுதியை நான் ஆதரிக்கிறேன். 

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால், இந்த திட்டத்தை செயல்படுத்த கூறி அவர்களை வலியுறுத்துவேன். இந்திய நதிகளை இணைத்துவிட்டால் பல இடங்களில் உள்ள பெரும்பாலான தண்ணீர் பஞ்சம் பிரச்சனை மற்றும் விவசாயத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து விடும், மக்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

மேலும், இந்த சமயம் தேர்தல் நேரம் என்பதால் இது குறித்து மேலும் பேசுவதற்கு விரும்பவில்லை என்று கூறினார்.

இதன் மூலம் தனது ஆதரவு பாஜக - அதிமுக கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk greeting to rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->