பாமகவிற்கு ராஜ்யசபா சீட்டா?! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அதிமுக கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 7 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. 

ஆனால் இந்த கூட்டணி எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால் பாமகவுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட படி ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்தது. இது குறித்து பலவாறான பேச்சுக்கள் இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பாமகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? என்று கேட்ட கேள்விக்கு நாங்கள் எப்போதுமே ஜென்டில்மேன், போட்ட ஒப்பந்தப்படி கடைபிடிப்போம் என தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தற்போது ராஜ்யசபா தேர்தல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்நேரத்தில் தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, அதிமுக கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாமக உடனான கூட்டணியை தொடர்வதில் அதிமுகவினர் விரும்புவதால் சிக்கல் இல்லாமல் பாமகவிற்கு இந்த இடம் கிடைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk give one rajyasabha seat as per agreement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->