அண்மையில் கட்சியில் இணைந்த பிரபலம்! புதிய பொறுப்பை கொடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளராக நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும்  கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிவிப்பில் "தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும் இன்று முதல் இணைத்துக் கொள்ளப் படுகிறார். 

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கழக உடன்பிறப்புகள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்" என அறிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK give new post to Prof Kalyanasundaram as spoke person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->