ராஜ்யசபா சீட்டு கிடைக்காத விரத்தியில், திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் அமைச்சர்.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதைதொடர்ந்து  அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிமுக சார்பாக மூன்று வேட்பாளர்களும், திமுக சார்பாக மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

திமுக தங்கள் கட்சியில் இருந்து மூன்று வேட்பாளர்களையும், அதிமுக தங்கள் கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்களும், கூட்டணி கட்சியில் இருந்து ஒரு வேட்பாளரையும் களத்தில் இறங்கியது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி கே வாசன் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யதுள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அத்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த மாநிலங்களவை தேர்தலின்போது தனக்கு ராஜ்யசபா சீட்டு வேண்டுமென அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி இடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தற்போது ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து முன்னாள் பெண் அமைச்சர் காத்திருந்ததாக கூறப்படுகிறது. 

விஜிலா சத்தியானந்த் பதவிக்காலம் முடிவடையுள்ளது. அவரிடத்தில் பெண் வேட்பாளராக தான் அறிவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கையில் இருந்த முன்னாள் அமைச்சர், இறுதி பட்டியலில் தன் பெயர் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் ஜி கே வாசனுக்கு எம்பி சீட்டு வழங்கப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister may be join dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->