6 வேட்பாளர்களின் பெயர் | எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 7 மணி நேரம் நடந்த தீவிர ஆலோசனை! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி கட்சி சார்பாக காங்கிரஸ் களமிறங்குகிறது. எதிர்க்கட்சி தரப்பில் அதிமுக சார்பாக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளார்.

இந்நிலையில், ஈரோட்டில் தற்போது முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில் 6 வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS urgent meet erode 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->