திமுகவில் இருந்து தலைவர்கள் விலகுவது தான், திராவிட மாடல் ஆட்சியா.? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது தான், திராவிட மாடல் ஆட்சி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக குறித்த வழக்குகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தமிழகம் திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தெரிவித்தார். 

குறிப்பாக, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்கள் சீரழியும் நிலை இருப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். 

மேலும், திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது 16 மாத கால ஆட்சியின் சாதனை, ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS speech about DMK in kovai airport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->