ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்க என்ன ஏமாளிகளா? வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS BJP Alliance TVK
அதிமுக ஆட்சியில் பங்குக்காக யாரையும் தேட வேண்டிய நிலைக்கு இல்லை என்றும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் உறுதியுடன் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நேற்று திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, “ஆட்சியில் பங்குத்தர நாங்கள் ஏமாளிகள் அல்ல. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கூட்டணி தேவையெனில் உருவாகட்டும்; இல்லையெனில் இல்லை. எதற்கும் பயமில்லை” என்றார்.
மேலும், “ஸ்டாலினைப் போல வாரிசு ஆட்சிக்கு வர விரும்பவில்லை. மக்களது விருப்பமே எங்களை ஆட்சிக்கு அழைக்கும். திமுக ஆட்சியை அகற்ற விரும்பும் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். திமுக ஒரு ஊழல் ஆட்சி; அதை அகற்றவே பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது” என்றார்.
“பல கட்சிகள் இன்னும் எங்களுடன் சேரவிருக்கின்றன. சரியான நேரத்தில் அதிரடி காட்டுவோம். 200 தொகுதிகள் வென்றால் போதுமென்று நினைத்தோம்; ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகள் வெல்வோம்” என்றும் உறுதியாக கூறினார்.
English Summary
ADMK EPS BJP Alliance TVK