அதிமுக - தேமுதிக மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.!  - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், அதிமுக தனது கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக, தமாக, புதிய நீதி கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 

இதில் இன்று மதியம் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை சென்னையில் தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இந்த பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோரும், பாஜக சார்பில் எல்.முருகன், கிஷண் ரெட்டி, கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தனியார் ஹோட்டலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk dmdk alliance meet 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->