ஒரு வழியாக இறுதியாகிறது.! வெளியான பரபரப்பு தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. அதிமுக -தேமுதிக இடையே இதுவரை நடந்து பங்கீடு பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமுகமாக நடைபெறவில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் தேமுதிக 25 தொகுதிகள் கேட்டதாகவும், அதற்க்கு அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. இது ஒரு புறம் இருக்க்க அதிமுகவுடன் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுதான் இருக்கிறது.

நேற்று, பாஜக - பாமக நிர்வாகிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பின்னர் தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், முரண்டு பிடிக்கும் தேமுதிவை முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் சமாதானம் செய்து சரி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் விளைவாக அதிமுக-தேமுதிக இடையே நாளை மறுநாள் (5ம் தேதி) உடன்பாடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk dmdk alliance issue 3


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->