பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ஓபிஎஸ், இபிஎஸ்! 3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்! - Seithipunal
Seithipunal


இன்று மதியம் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உடன் ஆளும்கட்சியான அதிமுக வின் கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்துள்ளார்கள். அதிமுக அரசின் கொறடா  பங்கேற்று உள்ளதால் எம்எல்ஏக்கள் தொடர்பாக சபாநாயகரிடம் ஏதாவது கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஏனெனில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆக வெற்றிபெற்று தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் ஆக கள்ளக்குறிச்சி தொகுதி பிரபு, விருத்தாச்சலம் தொகுதியில் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியில் இரத்தினசபாபதி ஆகியோர்கள் உள்ளார்கள்.

இதுவரை  பதிவு செய்யப்படாத கட்சியாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியாக பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தார்கள். தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதால் அவர்கள் வேறு ஒரு கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு வேறு ஒரு கட்சியில் பயணிப்பது கட்சிக்கு எதிரான செயல் என்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன்,   கள்ளக்குறிச்சி தொகுதி பிரபு, விருத்தாச்சலம் தொகுதியில் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியில் இரத்தினசபாபதி ஆகியோர் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால் அவர்களுக்கு எதிரான வீடியோ ஆதாரங்களுடன் சபாநாயகரை சந்தித்து தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேர்தல் முடிந்து மீண்டும் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், அறந்தாங்கி என  3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk decided disqualified anti admk MLAs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->