உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதில் சிக்கல்.. அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!! - Seithipunal
Seithipunal


9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ இரண்டு கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 தொடங்கி, செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் என அதிமுக தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கடந்த 14ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk case for local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->