தேர்தல் தோல்விக்கு பிறகு ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் போட்ட ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உட்பட 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்தனர். அமைச்சர்கள் நிலோஃபர் கபீல், வளர்மதி, பாஸ்கரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்ற 27 அமைச்சர்கள் போட்டியிட்டனர். 

அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயபுரம் - ஜெயக்குமார் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை ராயபுரம் தொகுதி ஜெயகுமார் போட்டியிட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சராக ஆனார். 

இதனால் ராயபுரத்தில் ஜெயகுமார் வெற்றி எளிதாக கிடைக்கும் என நம்பப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா. மூர்த்தியிடம் 27587 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். ஐட்ரீம் இரா.மூர்த்தி 63811 வாக்குகள் பெற்ற நிலையில், ராயபுரத்தில் செல்லப்பிள்ளை என கூறப்பட்டு வந்த ஜெயக்குமார் 36,224 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். 

இந்நிலையில், ஜெயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வெற்றியோ,தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும்  உங்களுடன் இருப்பேன்.. உங்களுடனேயே பயணிப்பேன் வாக்களித்த,வாக்களிக்காத இராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நான் எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும்.நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன் தான் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk candidate jayakumar tweet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->