எதிரிக்கு எதிரி நண்பன்.! யாரு எதிரி? யார் யார் நண்பன்.! நடக்குமா அந்த அரசியல் கணக்கு.!
ADMK AMMK NOW Stage
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது வரை திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தின் பிரதான ஆளும் -எதிர் கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கூட இதுவரை தொடங்கவில்லை. இதிலும் இந்த இரு பிரதான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற சந்தேகமும் வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறுமா என்ற சந்தேகம் வலுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, சொத்து குவிப்பில் 4 ஆனது தணடனை முடிந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். சசிகலா திரும்பி வந்ததும் திமுகவுக்கு கொண்டாட்டமாக இருந்தது. காரணம் அதிமுக உடையும் என்ற கணக்கு தான் அது. ஆனால் சசிகலா தமிழகத்தில் காலை வைத்த உடன் சொல்லிய வார்த்தை திமுகவை அழிப்பது தான் எங்கள் முக்கிய பணி என்றார். இதையே டிடிவி தினகரனும் கூறினார்.
ஆக., எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்குப்படி அதிமுக - அமமுக ஒன்று கூட்டணி வைக்கும். அல்லது இரு கட்சிகளும் ஒரே கட்சியாக (ஒரு மந்தையில் பிரிந்த இரு ஆடுகள் போல மீண்டும் ஒன்று சேரும்) அதிமுக மட்டும் போட்டியிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.