அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை தொகுதி.? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளது. காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. அதேபோல அதிமுகவுடன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. 

நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவினர் தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

இதனிடையே, தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையி,ல் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்க அதிமுக  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk alliance bjp seat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->