அதிமுக முன்னாள் எம்.பி-யை கைது செய்த போலீசார்.! காவல் நிலையத்தில் விசாரணை.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் எம்பி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நடந்த கோஷ்டி பூசல்களால் ஓபிஎஸ் இபிஎஸ் அணி என்று தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அப்போது நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தை இரண்டு தரப்பும் கேட்க, தேர்தல் ஆணையம் கட்சியையும், சின்னத்தையும் முடக்கி உத்தரவிட்டது.

பின்பு ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இணைய அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன் அணி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ், அதிமுக கட்சி அமைப்பில் பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கியும் பொதுக்குழுவை நடத்தினார்கள்.

2014 2019 ஆம் ஆண்டு மோடி தலைமைலான ஆட்சி காலத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரித்து மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என அதிமுகவில் இருந்த கே சி பழனிச்சாமி அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ் இபிஎஸ் அவரை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள்.

இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் க்கு எதிராக திரும்பிய பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அப்படியென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னைக் கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை. அவர்கள் என்னை நீக்கியது செல்லாது என்று தடாலடியாக கூறிவந்தார்.

பின்னர் இதனை எதிர்த்து கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவர்கள் என்னை நீக்க முடியாது, இவர்கள் வகிக்கும் பொறுப்பு கட்சியின் அமைப்பு பொறுப்புகளில் இல்லை மேலும் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது எம்ஜிஆர் வகுத்த சட்ட திட்டங்களுக்கு எதிரானது அதனால் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டுவந்து தேர்தல் நடத்தவும் ஓபிஎஸ் இபிஎஸ் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என கே சி பழனிச்சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தநிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமியை கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்து மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

 இந்த கைது நடவடிக்கை எதற்காக என்ற தகவல் போலீசார் தரப்பில் இருந்து எந்த வித பதிலும் கூறப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admik ex mp arrested by his house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->