பஞ்ச பூதத்திலும் ஊழல் திமுக.! உப்பு போட்ட வீட்டிற்கு துரோகத்தில் அமமுக மறைமுக கூட்டணி பலே.! பிரபல நடிகையின் அதிரடியால் ஆடிப்போன திமுக.!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ள வசவபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான மோகனை ஆதரித்து., தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

இந்த நேரத்தில் பேசிய முதல்வர்., துரோகிகள் மற்றும் எதிரிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்., திமுகவினருக்கும் - டிடிவி தினகரனும் ரகசிய உடன்பாடு வைத்து கொண்டு அதிமுக அரசிற்கு எதிரான நெருக்கடியை அளித்து வருகின்றனர். 

இவர்களின் நெருக்கடியில் இருந்து மக்கள் அனைவரும் காத்து மகத்தான ஆட்சியை நிலைக்க செய்ய வேண்டும். தொலைகாட்சி சேனல்களுக்கு மீண்டும் கட்டணத்தொகை ரூ.100 க்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்த நிலையில்., மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் முனியாண்டியை ஆதரித்து நடிகை வித்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது., உப்பு போட்ட வீட்டை மறந்து., அந்த வீட்டிற்கு துரோகம் செய்தவர் தினகரன்., திருட்டு திமுக கட்சி மற்றும் துரோகி அமமுக கட்சியை மக்கள் விரட்ட வேண்டும். பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக. அண்ணாவின் மறைவிற்கு பின்னர் எம்.ஜி.ஆர் உதவியின் காரணமாக கருணாநிதி முதல்வரானர் என்பதை யாராலும் மறைக்க இயலாது. 

English Summary

actress vidya speech about ammk and dmk party


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal