நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காலபைரேஸ்வரா கோவிலில் நடிகை சுமலதா சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

என்னுடைய கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மாண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு மட்டும் குறைந்ததில்லை. அவருடைய அந்த அன்பு, பாசத்தை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். எனது கணவரின் ஆசை என்னவோ அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் விரைவில் கைகொடுக்கும்.

எனது கணவர் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். இதனால் நான் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறேன். அவர் நின்று வெற்றி பெற்ற அதே மாண்டியா தொகுதியில்தான் நான் போட்டியிட விரும்புகிறேன். 

ஒருவேளை மாண்டியா தொகுதியில் காங்கிரசின் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். கட்சி வேட்பாளருக்கு சிட்டு கொடுத்தால் ரசிகர்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன். ரசிகர்கள் நான் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினால் அவர்களது ஆசையையும் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

English Summary

Actress Sumalatha Contest of Congress


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal