இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் ஆயிடுவீங்க பாத்து.. ஸ்டாலினை கிண்டல் அடித்த பிரபல நடிகை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணியை உறுதிசெய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், குடும்ப தலைவர்களுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும். மே 2ம் தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவதாகப்படும் என தெரிவித்துள்ளார்.

திமுகவின் இந்த அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். சென்னை துறைமுக தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நான்தான் டயலாக் சொல்லிக் கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும், நடிகையுமான ஸ்ரீப்ரியாவும் திமுகவின் இந்த அறிவிப்பை கேலிசெய்து ட்விட் செய்துள்ளார். ட்விட்டர் பதிவில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்...திமுக அறிவிப்பு... இப்படியெல்லாம் காப்பி அடிச்சா பெயில் (fail)ஆயிடுவீங்க பாத்து என கிண்டல் அடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sripriya tweet for stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->