ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்? - உறுதி செய்த டெல்லி வட்டாரம்.! - Seithipunal
Seithipunal


அண்மையில் டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை சந்தித்த கையேடு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.

இது தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறியது. மேலும் பல்வேறு யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. 

மேலும், நடிகர் ரஜினி, ஆளுனருடன் அரசியல் பேசினேன் என்று கூறியது பெரும் விவாத பொருளாகியது. அதில், பாஜகவில் ரஜினி இணைப்பு, அதிமுகவின் தலைமையாக ரஜினி, 2024 பாராளுமன்றத்தேர்தலில் ரஜினி போட்டி என்று பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினி ஆளுநர் ஆகலாம் என்ற ஒரு விவாதம் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

குறிப்பாக பிரபல ஒரு வார இதழ் ஒன்றில் சொல்லப்பட்ட செய்தியில், "நாட்டின் சில மாநிலங்களில் காலியாக உள்ள ஆளுநர் பதவிகளில், ஒரு சிறிய மாநிலம் ஒன்றில் நடிகர் ரஜினியை ஆளுநர் பதவியில் அமர வைக்கலாம்" என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த செய்தியை டெல்லி அரசியல் வட்டாரத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

என்ன முடிவு என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் நடிகர் ரஜினியை பாஜக களத்தில் இறக்குவது உறுதி என்கிறது பாஜகவின் அரசியல் வட்டாரம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACTOR RAJINI MAY BE Governor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->