நயன்தாராவுக்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர், அதிமுகவில் ஐக்கியமானார்.! - Seithipunal
Seithipunal


மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் "கொலையுதிர் காலம்" படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பலர் தரப்பில் இருந்து கண்டம் தெரிவித்தனர். மேலும் நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. ராதா ரவியை திமுக கட்சியிலிருந்து விலக்கினார்கள். தனது குடுப்பதில் இருப்பவர்களே ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவரும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor radha ravi join admk


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal