ஒரே ஒரு சந்திப்பில் திமுகவை ஆட்டம் காண செய்த ரஜினி.. பேரதிர்ச்சியில் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

திமுகவிற்கு கிடைக்கும் ஓட்டுகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் ஓட்டுகள் தான். மற்ற மதத்தின் ஓட்டுகள் மற்ற கட்சிகளுக்கு பிரிந்து சென்றாலும், முஸ்லிம் ஓட்டு திமுகவுக்கு தான் என இருந்தது.

இந்நிலையில் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் மத குருமார்களும் உடன் ரஜினிகாந்த் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அபுபக்கர் திருப்தி அடைந்து வெளியே வந்து, செய்தியாளர்களிடம் ரஜினியை புகழ்ந்து பேசினார். 

மேலும் ரஜினிக்கு சிஏஏ சட்டம் குறித்து நன்கு தெரிந்தவர் என கூறினார். பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருந்த இஸ்லாமிய ஓட்டுக்களை ஒரே சந்திப்பில் திமுகவிடம் இருந்த ரஜினி பறித்து விட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய ஓட்டுகள் ரஜினிக்கு சென்றுவிட்டால், திமுக டெபாசிட்டை வாங்குவது கடினம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abubakar meet rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->