அபிநந்தன் சிக்கும் முன் செய்த வீரதீர செயல்.! இதுவரை வெளிவராத உண்மை.!! அதிர்ச்சியில் பாகிஸ்தான்.!! அதிகாரபூர்வ அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை இராணுவப் படைகள் சென்ற வாகனத்தின் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் போர் விமானம் மூலமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெடிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கியது. இதில் முக்கிய பயங்கரவாத அமைப்பின் முகாம்களும் தகர்க்கப்பட்டன. இது இந்தியர்களுக்கு ஒரு மன நிம்மதியாக இருந்தது.

இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் ராணுவ விமானங்கள், இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

அப்போது பாகிஸ்தானின் எப்.16 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது. அப்போது, இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன், அந்த விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த சம்பவத்தின்போது விமானம் நிலைத்தடுமாறியதால் பாகிஸ்தானுக்குள் விழுந்த அபிநந்தனை, அந்நாட்டு ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர். பின்னர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் குறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை இயக்கிய விமானியின் அடையாளம் தெரியவந்துள்ளதாகவும், பாகிஸ்தான் பகுதியில் விழுந்த அவரை அங்குள்ள கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். ஆனால், அவர் குறித்த விவரத்தை தற்போது வெளியிட முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

ABINANDAN NEW INFORMATION


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal