பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் 'தொட்டில் குழந்தை திட்டம்' ஆகும். இந்த திட்டத்தினை கடந்த 1992 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம். அனைவராலும் பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணி வீதியில் வீசும் சம்பவங்கள் இன்று வரை குறைந்தபாடு இல்லை. 

ஒருபக்கம் குழந்தை இல்லை என்று கோவில், மருத்துவமனை என்று அலையும் தம்பதிகள் இருக்கும் இதே தமிழகத்தில் தான், தங்களுக்கு பிறந்த குழந்தையை வீதியில் விட்டு செல்லும் சம்பவங்களும்  அரங்கேறி வருகிறது.

அப்படி வீசப்படும் அந்த பிஞ்சுகளை பாதுகாத்து பராமரித்து வளர்க்க, மறைந்த முதலவர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட "தொட்டில் குழந்தை திட்டம்" ஒன்று தான் இன்றும் பாதுகாப்பது அரணாக உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை "தொட்டில் குழந்தை திட்டம்"  மூலம் ஒப்படைக்கப்பட்டது. 

பிறந்து 5 நாளே ஆன இப்பெண் குழந்தைக்கு "தக்ஷா" (தக் ஷா) என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெயர் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியும் வெளியிட்டுள்ளார். இதனை சமூக ஆரவாளர்கள் பலரும் பாராட்டி, மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abandoned Girl baby in Tiruvannamalai is handed over to CWC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->