துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு விடுக்கப்பட்ட கெடு.! அடுத்தடுத்து நடக்கப்போகும் சம்பவங்கள்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிகிச்சை அனைத்தும் பொய்த்து., டிசம்பர் மாதத்தில் 5 ம் தேதியன்று உயிரிழந்தார். 

இவரது மறைவிற்கு பின்னர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது வெவ்வேறு அணிகளாக பிரிந்து சென்றது., இதன் மூலமாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது செயல்பட்டு., அவர்களின் கீழ் ஆட்சியானது நடைபெற்று வருகிறது.

டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலா தலைமையில் அம்மா முன்னேற்ற கழகமானது உருவாக்கப்பட்டு., சசிகலா தற்போது சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்தும்., டி.டி.வி தினகரன் கட்சியின் செயல்பாடுகளை கவனித்தும் வருகின்றார். இந்நிலையில்., அதிமுக கட்சிக்காகவும்., இரட்டை இலை சின்னத்திற்க்காகவும் தொடர்ந்து டிடிவி தினகரன் பல விதமான முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். 

இந்நிலையில்., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும்., அதனை கண்டறிய வேண்டும் என்றும் இருதரப்பில் இருந்தும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வந்தனர். இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணையானது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கீழ் நடைபெற்று கொண்டு வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்., துணை முதலைச்சர் நாளை (23/01/19) நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்டு இருந்தது., இந்நிலையில்., நாளை நடைபெற விருந்த விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும் கால அவகாசம் கோரியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சார்பில் கோரப்பட்டு இருந்தது. 

இதனை ஏற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்., வரும் 29 ம் தேதியன்று விசாரணைக்கு வந்து ஆஜராகும் படி உத்தரவிட்டு சம்மன் வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aarumugasamy investigation party will send order to ops.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->