அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் கிளம்பியது புதிய பிரச்னை.! உடனே தயாராகுங்கள்.!! ஆதார்-லைசன்ஸ்.!!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆதார் திட்டமானது, தற்போது நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வருகிறது. இதை பல சிக்கல்கள் இருந்தாலும், இதனை நடைமுறை படுத்தியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஆதார் என்னுடன் உங்களது ஓட்டுநர் உரிமத்தை (டிரைவிங் லைசன்ஸ்) இணைக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. தற்போது பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வரும் 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ''விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ''ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் தப்பிப்பதுடன், மாற்று ஓட்டுநர் உரிமத்தையம் பெற்று விடுகின்றனர். இதனை தடுக்கவும், அவர்களுக்கு தண்டனை வழங்கவும், ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைப்பது கட்டயமாக்கப்படுகிறது.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது'' என்று தெரிவித்துள்ளார். 

English Summary

AADHAR LINK TO DRIVING LICENCE


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal