90 வயதில் தலைவர் பதவிக்கு வேட்புமனு, 20 ஆண்டுகளாக தலைவர் பதவி வகித்து வரும் குடும்பம்.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயது மூதாட்டி ஒருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி கிராம ஊராட்சி முருங்கபட்டி என்ற கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயதான கனக வல்லி என்பவர் நேற்று தனது உறவினர்கள் புடைசூழ வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையில் கனகவல்லி ஏற்கெனவே முருங்கபட்டி கிராம ஊராட்சி தலைவராக  பதிவி வகித்துள்ளார். மேலும், இதே கிராம ஊராட்சி யில் கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி மற்றும் அவரது மகன் பார்த்தசாரதி ஆகியோர் தலா 20 ஆண்டுகள் ஊராட்சி தலைவராக இருந்துள்ளனர்.

நேற்றைய மனுத்தாக்களின் போது கனகவல்லி கூறியதாவது, நானும் எனது குடும்பத்தினரும் முருங்கபட்டியின் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த சமயத்தில், கிராமத்துக்கு தேவையான சாலை, மின்சாரம், பொது சுகாதார உள்ளிட்ட அணைத்து அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அரசு அதிகாரிகள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். இதனால், முருங்கபட்டியில் எங்கள் குடும்பத்தினர் மீது பொதுமக்களுக்கு தனிப்பட்ட முறையில் நல்ல அபிமானம் உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்காக எங்கள் குடும்பத்தினரை  ஒரு ரூபாய்கூட செலவு செய்ய முருங்கபட்டி கிராம மக்கள் விடுவதில்லை. பொதுமக்கள் தான் தங்களின் சொந்த பணத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும் எங்கள் குடும்பத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றியை அளித்து வருகின்றனர். 

தற்போது நடைபெறும் இந்த தேர்தலிலும் நான் வெற்றி பெற்று, முருங்கபட்டி  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவேன் என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90 age women nominate for localbody election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->