7 வது முறையாக முதலமைச்சர் ஆகும் நிதிஷ் குமார்.! வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


 

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 74 தொகுதிகளைக் கைப்பற்றி ஆளும் கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.  இதில் அடுத்த அமைச்சராக நிதிஷ் குமார் தொடர்வது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டுவிட்டது. இன்று மதியம் நிதிஷ் குமார் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் முத்த-அமைச்சராக 7-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்-அமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 TIME CM nithish kumar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->