மொத்தம் 6 பேர்., தமிழக அரசு நேற்று இரவு போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில், 

* தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச் செயலாளர் அம்ரிதா ஜோதி, சமர சிக்‌ஷா கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

* நில நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் கற்பகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

* இ-சேவை இணை இயக்குனர் சரஸ்வதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனர் வள்ளலார், தொழில் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* தொழில் துறை ஆணையர் நந்தகோபால், பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் பொருட்கள் கூட்டமைப்பு லிமிடெட் துறை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

* கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் மாவட்ட கிராம அபிவிருத்தி (திருவாரூர் மாவட்டம்) கமல் கிஷோர் இ-சேவை இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 IAS officers changed dec24


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->