இன்று வெளியாகப்போகும் அறிவிப்பு.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இன்று தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தல் ஆணையமும் அதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டு உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் இருமுறை தமிழகம் வந்துள்ளார். இரண்டு முறையும் தமிழக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பாதுகாப்பு குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழகம் -புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் ஆணையமும் ஒரே கட்டமாகத்தான் தேர்தலை நடத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர் இந்த 5 மாநில தேர்தல் தலைமை அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்தலாம் என்பது குறித்தும் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 STATE Assembly election date info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->