தமிழகம் முழுவதும் பரந்து விரிந்த கட்சிக்கு வெறும் 4 சீட்டா? திமுக மீது கொந்தளிப்பில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகிய நிலையில், நேற்று விசிக-வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேபோல், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை மதிமுக-வுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. 

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்ட 3 பேர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் மதிமுகாவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே திமுக தர முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தனது கடும் அதிருப்தியை மதிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து வைகோ தலைமையில் தொடர்ந்து மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணியை விட்டு விலகி தனியாக போட்டியிட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் மதிமுகாவுக்கு 4 தொகுதியா? என்று மதிமுக தொண்டர்களும் திமுக மீது கடும் கோவத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 SEAT ONLY VAIKO UPSET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->