அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த 4 எம்எல்ஏக்கள்.. காரணம் இதுதான்.! - Seithipunal
Seithipunal


மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சில நாட்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஒற்றை தலைமையில் அதிமுக கட்டுபாட்டுடன் கொண்டு செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. 

ஒரே தலைமை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழு வலியுறுத்துவோம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும். ஆளுமை திறன் உடைய ஒருவர் தலைமையில் இல்லை. 

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனிடையே சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் மூவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், அதிமுக தலைமை வேண்டும் என வலியுறுத்திய குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 mla not attend admk meeting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->