அதிமுகவுடன் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை.. 3-வது அணியை அமைக்கப் போகும் அதிமுக கூட்டணி கட்சி.!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். கூட்டணி குறித்து அமித் ஷா வாய் திறக்கவில்லை. 

பிறகு நடந்த பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி குறித்து முருகனுடன் பேசி முடிவெடுத்து கொள்கிறேன் இதனால் நீங்கள் யாரும் கூட்டணி பற்றி பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவினர் கூறியதை வைத்து கூட்டணி முடிவாகிவிட்டது என பாஜக நேரம் நினைத்திட வேண்டாம் முருகனிடம் பேசி முடிவெடுத்து கொள்கிறேன் என சூசகமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் அமித் ஷா. 

அப்படியானால், இன்னும் மூன்றாவது அணி அமைக்கும் முடிவில்தான் பாஜக இருக்கிறதா.? என்ற குழப்பத்தில் தமிழக அரசியல் களம் உள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ரஜினியும் இணைந்து 3-வது அணி அமைக்கும் முயற்சியில் பாஜக மீண்டும் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது கூட்டணி குறித்து பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனைக்கு பிறகு கூட்டணி தொடர்பான அறிவிப்பை தமிழக பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி முடிவாகி விட்டது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்றும் மீண்டும் மூன்றாவது அணி அமைக்கும் மன நிலையில் பாஜக உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd team for bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->