ஒரே நாளில் 30 ஆயிரம் பேர்! கொண்டாட்டத்தில் முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


திமுகவின் முப்பெரும் விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. இந்த விழாவை தொடங்கி வைத்த திமுக தலைவர் மு க ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் 'எல்லோரும் நம்முடன்' எனும் திமுக உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கிவைத்தார்.

அடுத்து வரும் 45 நாட்களில், குறைந்தபட்சம் 25 லட்சம் புதிய திமுக உறுப்பினர்களை ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மேலும், திமுகவில் உறுப்பினராக சேர விரும்புவோரின் கனவை மிகவும் எளிமைப் படுத்தும் நோக்கில், இணையம் வழியாக திமுக உறுப்பினர்களை சேர்ப்பதற்கான புதிய இணையதளத்தை அன்று மாலையே மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த இணையத்தில் சென்று திமுகவில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆன்லைன் மூலமாக திமுகவில் புதிதாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30000 members joint in dmk in single day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->