3 ராஜ்யசபா வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு.. ஜி.கே. வாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதைதொடர்ந்து  அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிமுக சார்பாக மூன்று வேட்பாளர்களும், திமுக சார்பாக மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

திமுக தங்கள் கட்சியில் இருந்து மூன்று வேட்பாளர்களையும், அதிமுக தங்கள் கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்களும், கூட்டணி கட்சியில் இருந்து ஒரு வேட்பாளரையும் களத்தில் இறங்கியுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி கே வாசன் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யதுள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, அத்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யதுள்ளனர். மேலும், சுயேச்சையாக பத்மராஜன், இளங்கோ யாதவ் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், ஆகிய மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கேபி முனுசாமி, ஜி கே வாசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், இளங்கோ யாதவ் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் வாங்கு வதற்கான காலக்கெடு முடிந்த உடன் அனைத்து போட்டியாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என அறிவிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 rajyasabha candidates nomination rejection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->