அடுத்தடுத்து மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா.. மீதமுள்ள எம்எல்ஏக்களை காப்பாற்ற நடைபெறும் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


18 மாநிலங்களவை எம்.பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. ஆகையால் 18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் மற்ற எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் இருந்து காப்பாற்ற பல்வேறு தங்கும் விடுதிகளில் காங்கிரஸ் கட்சி தக்கவைத்துள்ளது. 

வடக்கு குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அருகே உள்ள விடுதியில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த் மாவட்டத்தில் இரண்டு தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மாநில தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே அடுத்தடுத்து மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் 182 எம்எல்ஏக்கள் கொண்ட குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 65 ஆக குறைந்துள்ளது. பாஜகவிற்கு 103 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் பணம் மற்றும் பதவி ஆசை காட்டி தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜக இழுப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 congress mlas resign in gujarat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->