தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக போகும் 3 முக்கிய புள்ளிகள்.! அதிமுக மற்றும் கூட்டணி கட்சிக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


வருகிற டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய பாஜக அரசு முடிவு செய்து உள்ளது. அதில் அதிமுகவுக்கு மூன்றாம் அமைச்சர் பதவிகளை தருவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மத்திய அமைச்சர் பதவி யாருக்கு வழங்குவது என அதிமுகவில் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் வருகைக்குப் பிறகு பாஜக தலைமையில் ஏற்பட்ட மிக முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற உள்ளது. 

பாஜக கூட்டணியில் இந்த சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் அதிமுகவை இணைத்துக்கொள்ள பாஜக முன்வந்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளார். 

அவருக்கு இந்த முறை வாய்ப்பு நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணி கட்சிக்கும் ஒரு மத்திய அமைச்சர் பதவி ஒதுக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவும், அமித்ஷா தனியாக ஒரு 7 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளார். இந்த குழு அதிமுக-பாஜக இடையே தகவல்கள் பரிமாறுதல், தேர்தலில் வியூகங்கள் ஆகியவற்றை முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 central ministers for admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->