234 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. அதேபோல, டிடிவி தினகரன் மற்றும் கமலஹாசன் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. 

இதையடுத்து, வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை விறுவிறுப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 6,183  ஆண் வேட்பாளர்களும், 1609 பெண் வேட்பாளர்கள், 3 திருநங்கை வேட்பாளர்களும் என மொத்தம்  7255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வகையில் மொத்தம் 7255 வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ததில், 2716 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 4492 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். அவர்கள் ஒரு மனு ஏற்பட்டவுடன் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தானாகவே தள்ளுபடி ஆனது. அதேபோல் மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி ஆனது. 

மேலும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் இன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இதற்கு முன்னதாக கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2021 assembly election candidates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->