கூட்டணி கட்சிகளுக்கு 34.. விசிக-விற்கு 2 தொகுதி.. கறார் காட்டும் திமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

இதனிடையே, 200 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியானது. இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்து, கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகளை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்ப்பந்திப்பாதக தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்தார்.

மேலும், கூட்டணி கட்சிகளும் தனி சின்னத்தில் தான் போட்டுவிடுவோம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மு க ஸ்டாலின் இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 10 தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு அதிகபட்சமாக 2 தொகுதிகளை கொடுக்கலாம் என ஸ்டாலின் தரப்பில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 volume for vck in dmk alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->