சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்து ஒய்.எஸ்.ஆர்  காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. 

ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட  தெலுங்கு தேசம் கட்சி 24  சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது 151-ல் அக்கட்சி படுதோல்வி அடைந்தது.  151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர்  காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார் 

ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றனர். 

சுகாதாரத்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ. 3000 இருந்து ரூ. 10000-மாக உயர்த்தி உள்ளார். விவசாயிகளுக்காகரையத் பரோசா என்ற திட்டத்தின் மூலம் 12 500 வரை சலுகை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் 5 முதலமைச்சர்களை நாட்டிலேயே முதல்முறையாக நியமித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை போலவே மக்களவை தேர்தலிலும் 3 இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. இதனால், தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியல் கடும் அதிருப்தியில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் அக்கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் முன்னாள் மாநில அமைச்சருமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும்,  இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 safety to chandrababu naidu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->