திடீர் திருப்பம்.! அதிர்ச்சியில் உறைந்துபோன குமாரசாமி.! ஆதரவு வாபஸ்.!! ஆளுநரை சந்தித்த எம்எல்ஏ-க்கள்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசின் பரமேஸ்வரும் பதவி ஏற்றனர்.

எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவிடம் 104 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அம்மாநிலத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி என்றால் அது பாஜக தான். ஆனால், ஆட்சிக்கு தேவையான  எம்.எல்.ஏக்கள் இல்லாத காரணத்தினால், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை, பாஜக தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் செயல்படுவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 எம்.எல்.ஏ.க்கள், வரும் 16-ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் சேர உள்ளதாக தகவல் பரவியது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய முதல்வர் குமாரசாமி, எனது ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்றும், என்னிடம் கூறிவிட்டு தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பை சென்று உள்ளதாகவும் முதல்வர் குமாரசாமி தெரிவித்து இருந்தார்,

இந்நிலையில், கர்நாடகா மாநில குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று உள்ளனர். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் இரண்டு பெரும் தங்களது வாபஸ் கடிதத்தை அம்மாநில ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், ஆளும் குமாரசாமி தலைமையிலான அரசை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 mla not support to kumarasami govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->