தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக போகும் இரண்டு பேர்.? அதிர்ச்சியில் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. அந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும், வரி செலுத்தும் சதவீதங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசு நினைக்கிறது. தமிழகத்தை சேர்ந்த 2 பேரை மத்திய அமைச்சராக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாமக அன்புமணி ராமதாசுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தமிழ்நாட்டிற்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியிருப்பதால், அன்புமணி ராமதாஸுக்கு கண்டிப்பாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

அதேபோல், மோடிக்கு நெருக்கமாக ஜி கே வாசன் இருப்பதால், அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை எப்படியாவது மத்திய அமைச்சராக ஆக்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவியை இல்லை என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 central minister post for tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->