நாளை முதல் 144 தடை உத்தரவு.. மாவட்ட ஆட்சியர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. 

அரசியல் கட்சிகள் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் கூறியபோது, புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. அமைதிக்கு எதிரான சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கம்பிகள் மற்றும் பேனர்கள் வைத்திருத்தல், கோஷங்கள் எழுப்பியதால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது ஊரடங்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் பிற தேர்தல் தொடர்புடைய செயல்களுக்கு இது பொருந்தாது. மக்கள் அதிகளவில் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 in puducherry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->