வாக்கு பதிவு சமயத்தில், அதிமுக மற்றும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 113 கிராம மக்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இன்று  இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் 113 கிராமங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

113 villagers ignored the election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->