அதிமுகவின் 11 எம்எல்ஏகளுக்கு தேதி குறித்த உச்ச நீதிமன்றம்.! திமுகவால் சிக்கலில் சிக்கிய அதிமுக.! - Seithipunal
Seithipunal


அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, தற்பொழுது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பின்போது, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கானது மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கானது தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என நீதிமன்றம் உத்தரவிட, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என மேல்முறையீடு செய்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அவரது முறையீடை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் முறையீடு குறித்து விரைவில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் அதற்கு ஏற்றார்போல் வழக்கினை பட்டியலிட வேண்டும் என கபில் சிபில் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணை எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிற்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு உருவாகியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 admk mla case investigation on supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->