தினமும் பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா.? அதிர்ச்சியளிக்கும் ஆய்வின் தகவல்.! - Seithipunal
Seithipunal


பணியிடத்தில் பதவி உயர்வு , சம்பள உயர்வு, பாஸிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் சிலருக்கு பணி நிபந்தனை என்று  நீண்ட நேரம் அதாவது பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்கள் எனில் அது உங்கள் உடல் நலனுக்கே ஆபத்து என ஆய்வு எச்சரித்துள்ளது.

அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னல் வெளியிட்ட ஆய்வில் பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வோருக்கும், 10 வருடங்களுக்கு மேல் நீண்ட நேரம் வேலை பார்ப்போருக்கும் பக்கவாதம் வரும் என்று கூறிருக்கிறது.

இந்த ஆராய்ச்சியானது 18 - 69 வயதிற்கு உட்பட்ட 1,43,592 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதயத்தின் ஆற்றல் பலவீனமாகும் அறிகுறிகள் மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 1,224 பேரில் 29 சதவீதத்தினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும், 42,542 பேர் நீண்ட நேரம் வேலை செய்வதாகவும் அதில் 14,481 பேர் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதாகவும் கூறிப்பட்டார்.

பின்னர் அவர்களுள் 29 சதவீதத்தினருக்கு பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் தீவிரமாக இருப்பதும் அதில் அவர்கள் 10 வருடங்களாக நீண்ட நேரம் வேலை பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

ஒருநாளைக்கு பத்து மணி நேரம் வேலை செய்வதைக் கணக்கிட்டால் வருடத்திற்குக் கூடுதலாக 50 நாட்களுக்கு மேல் வேலை செய்வது எனும் கணக்கில் வரும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என டெஸ்கதா ( Descatha ) கூறுகிறார். இவர் பாரிஸ் மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் ஆராய்ச்சியாளர்.

ஆய்வில் கூறப்பட்டுள்ள மேலும் சில தகவலின்படி குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி அதிக நேரம் வேலை செய்யாதீர்கள் என பரிந்துரைக்கிறது. இதுமட்டுமன்றி சீரற்ற ஷிஃப்டுகள், இரவு வேலை, அதிக வேலை, தொல்லை தரும் பாஸ் இப்படியான பணிச் சூழலும் உடல் நலனிற்குக் கேடு என்று எச்சரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Work more than 10 hours


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->