நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.!!  - Seithipunal
Seithipunal


நாம் இன்றுள்ள நிலையில் நமது உடலை பலப்படுத்துவதற்கு பலவிதமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். அந்த வகையில்., தாயின் கருவறையில் இருக்கும் சமயத்திலேயே நாம் பழகிய ஒரு உடற்பயிற்சி நீச்சல். நீச்சல் பயிற்சி செய்வதன் மூலமாக நுரையீரலானது வலுப்பெறும். உடலில் இருக்கு தேவையற்ற கலோரிகள் வெளியாகும்., உடலுக்கு சக்தி அதிகமாகும். 

நாளொன்றுக்கு சுமார் அரை மணி நேரம் கண்டிப்பாக நீச்சல் பயிற்சி செய்வது நமது உடலை பாதுகாக்கும். வாரத்தில் குறைந்தது சுமார் 5 முறையாவது நீச்சல் பயிற்சி செய்து வந்தால்., நமது உடலானது நல்ல வலுப்பெரும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

அவ்வாறு பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக எதுவும் சாப்பிட கூடாது. நீச்சல் பயிற்சியை துவங்குவதற்கு முன்னதாக உடலை மேல்நோக்கி சாய்த்து., சிறிய அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பின்னர் நீரில் படுத்துக்கொண்டு கை மற்றும் கால்களை அசைத்து., மெதுவாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 

நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் சமயத்தில் வலிப்பு நோய் உள்ள நபர்கள்., தோல் நோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ள நபர்கள்., சிறுநீரை அடக்க இயலாத நபர்கள் உதவிக்கு தங்களுடன் நீச்சல் நன்றாக தெரிந்த நபர்களை வைத்து நீச்சல் பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 

நீச்சல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக கால்களின் தொடைகளுக்கு அதிகளவு வலிமையை தருகிறது., கைகளின் புஜங்களுக்கும் - மார்பு தசைகளின் வலிமைக்கும் உதவுகிறது. உடலின் எடையை வெகுவாக சமநிலை படுத்தி., உடலின் அழகையும் ஆரோக்கியத்தையும் மாற்றுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will you swim daily to gain more health and gain beauty of body


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->