இன்ப சுற்றுலாவில் ஆர்வமிகுதியால் இதனை செய்தீர்கள் என்றால் மொத்தமாக முடிந்துவிடும்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் வாழ்ந்து வரும் அனைவரும் அன்றாட பணிகள் அனைத்தையும் தொடர்ந்து இடைவெளியின்றி மேற்கொண்டு வருகின்றனர். பலநாட்கள் தொடர் பணியாற்றிய பின்னர் சில நாட்கள் மன அமைதி வேண்டி சுற்றுலா சென்று வர முயற்சி செய்து அதன் மூலம் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் சுற்றுலா செல்லும் போது கேளே வழங்கப்பட்டுள்ள சில சில யோசனைகளை கடைபிடித்து அதன் மூலம் புதிய மனிதராக மீண்டு வாருங்கள். 

சுற்றுலா செல்லும் போது., அங்குள்ள சூழலை மகிழ்ச்சியோடு அனுபவிப்பதற்காக தங்களின் நண்பர்களின் வருகை பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். இதன் மூலம் உங்களின் உள்ளம் அறிந்த நண்பரை தேர்வு செய்து மகிழ்ச்சியோடு சுற்றுலாவை சிறப்பித்து கொண்டாடுங்கள். 

சுற்றுலா செல்லும் இடத்தில் தேவையற்ற அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடவேண்டாம். 

சுற்றுலா செல்லும் இடங்களில் அன்றாடம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ளுங்கள். சுற்றுலா செல்லும் முக்கிய காரணமான மன அமைதியை மேம்படுத்துவதற்க்கும் இது உதவும்.    

இன்பமாக சுற்றுலாவிற்கு சென்று திரும்பி வரும் நேரத்திலும்., சமூக வலைத்தளங்களின் பிடியில் எப்போதும் இருக்காதீர்கள்., மன அமைதி மற்றும் இணையத்தின் பிடியில் இருந்து வரும் மன அழுத்தத்தை குறைக்கவே சுற்றுலா செல்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இன்பமாக சுற்றுலா செல்வோம் என்று கூறிவிட்டு., அதிகளவிலான தொலைதூர பயணங்களை இருசக்கர வாகனத்தில் மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது உடல் அலுப்பினால் கடும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when take a long tour tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->