மனக்கவலை உங்களை வாட்டி வதைக்கிறதா?... இதை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


கவலை இல்லா மனிதனை பார்ப்பது அரிதான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்கத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

ஆனால் ஒரு சிலர் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி அதை பற்றியே மேலும் கவலை கொள்வார்கள். ஆனால் ஒரு சிலரோ அதனை எதிர்கொண்டு கவலைகளை நீக்குவதற்கான வழிகளை மேற்கொள்வார்கள். 

கவலைகளை போக்கும் இயற்கையான சிகிச்சை முறைகள் நம்மை அடிமையாக்கும் மருந்துகளைக் காட்டிலும் சிறந்தவைகள் ஆகும். கவலைகள் சிறிதாக இருந்தால் உங்கள் மனதையும், உடலையும் பாதிக்காது. 

தொடர்ந்து நீடிக்கும் கவலைகளும், பதற்றமும் மன ரீதியான பிரச்சனைகளையும், உடல் ரீதியான பிரச்சனைகளையும் உண்டாக்கும். இயற்கையான முறையில் கவலைகளை தீர்ப்பதற்கான சில வழிகளை தெரிந்துக்கொள்வோம்.

சாப்பிடுதல்:

நிறைவான காலை உணவு உட்கொண்டால் அன்று முழுவதும் உள்ள பரபரப்பான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான சக்தியை அது கொடுக்கும். இது கவலைகளை குறைக்க உதவும்.

ஓய்வு முறைகள்:

நீங்கள் கவலையுடன் இருப்பதாக உணர்ந்தால் அதில் இருந்து உங்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கான புதிய நம்பகமான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் வௌ;வேறு வழியான ஓய்வு எடுக்கும் முறைகள் இருக்கும். 

பாட்டு கேட்பது, நீண்ட தூரம் நடைபயணம் செய்வது, குளிப்பது அல்லது விருப்பமான படத்தை பார்ப்பது போன்றவைகள் பயனுள்ளவைகளாக இருக்கும். உங்கள் கவலைகளை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒரு வழியை முயற்சி செய்வதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து உங்கள் மனதை திசை திருப்பி புத்துணர்சியை ஏற்படுத்தும்.

நீங்கள் எதைப்பற்றியாவது கவலை கொண்டிருந்தாலோ, எதைப்பற்றியாவது அதிருப்தி அடைந்திருந்தாலோ அதனால் உங்கள் மனதில் எழும் எதிர்மறையான எண்ணங்களை போக்குவதற்கு யோகா மூச்சுப்பயிற்சியை செய்யலாம். இந்த கட்டுப்பாடான மூச்சுப்பயிற்சியானது உங்கள் மனதையும், எண்ணங்களையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

உடற்பயிற்சி:

தீவிரமான உடற்பயிற்சியும் கவலையை தீர்க்கும் ஆரோக்கியமான இயற்கை சிகிச்சை முறையாகும். உடற்பயிற்சியினால் வெளியாகும் ஹார்மோன்கள் கவலையையும், மன அழுத்தத்தையும் குறைக்கும். 

தியானம்:

தினமும் 15 நிமிட தியான பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவி புரியும். இது ஒரு சிறந்த இயற்கை முறையான சிகிச்சையாகும். இது கவலைகளை குறைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி புரியும். நீங்கள் தியானம் செய்யும்போது உங்கள் மனம் உடலோடு சேர்ந்து ஓய்வு எடுக்கும். தொடர்ந்து தியானப்பயிற்சியில் ஈடுபட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கான மூலக்காரணங்களை கண்டறியலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unconcerned


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->