பெண்ணுக்கு ஒரு பெண்ணே தாலி காட்டும் கலாச்சாரம்!! வியக்கவைக்கும் காரணம்!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் ஆகிய 3 கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் வினோத நடைமுறை ஒன்றை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதாவது அங்குள்ள  ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி திருமணத்திற்கு தயாராகிறார்.

ஆனால் திருமணத்தில் மணமகன் கலந்து கொள்ள முடியாமல், அவருக்கு பதிலாக திருமணம் ஆகாத அவரது சகோதரி அல்லது அவரது குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் ஒருவர் மணமகனுக்கு பதிலாக அனைத்து சடங்குகளையும் செய்யும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே மணமகளின் வீட்டிற்கு சென்று மணமகனின் சகசாத்திரியே அவரை மணமுடித்து, பின்பு அவரை வீட்டுக்கு அழைத்து வரும் பழக்கத்தை வைத்துள்ளனர். இந்த வழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்துவருகின்றனர். இத்தகைய சடங்குமுறையை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு துன்பங்கள் வந்து சேரும் என அப்பகுதியினர் நம்புவதாலேயே அந்த பழக்கத்தை கடைபிடித்துவருகின்றனர்.

இதற்கு முன்னர் இந்த வழக்கத்தை கடைபிடிக்காதவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl is the culture of the Talali


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->