இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களில் இரும்பு சத்து அவசியமான ஒன்று. உடலுக்கு தேவையான ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. உடலில் இரும்புசத்து குறைப்பாட்டால் உடல் அசதி, முடி கொட்டுதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். அவற்றை தடுக்க இரும்பு சத்து உள்ள உணவுகளை சேர்த்து கொள்வது அவசியமாகிறது. எந்தெந்த உணவுகளில் இரும்பு சத்து இருக்கிறது என தெரிந்து கொள்ளுவோம்.

பேரீச்சம்பழம் :

100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 தேவையை சரிசெய்ய உதவுகிறது. மேலும், கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் ஆகியவை கிடைக்கின்றன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர இரும்பு சத்து கிடைக்கும்.

மாதுளை :

100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துகளை உடலுக்கு தருகிறது. இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்துகொள்ளுதல் அவசியமாகிறது.

உலர்திராட்சை :

உலர் திராட்சையில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க தினமும் ஒரு கைப்பிடி திராட்சை சாப்பிட்டு வர  உடல் எடையை அதிகரிக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Take iran Foods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->